சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய மினி லாரி! ரத்த வெள்ளத்தில் 5 பேர் துடிதுடித்து பலி!

Published : Jul 17, 2024, 09:34 AM ISTUpdated : Jul 17, 2024, 09:42 AM IST
சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய மினி லாரி! ரத்த வெள்ளத்தில் 5 பேர் துடிதுடித்து பலி!

சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டியையைச் சேர்ந்த பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டியையைச் சேர்ந்த பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது. 

இதையும் படிங்க: மின்னல் வேகத்தில் வந்த பைக்! சாலையை கடக்க முயன்ற நீதிபதி தூக்கி வீசப்பட்டு பலி! விபத்தை ஏற்படுத்தியவர் எஸ்கேப்

இந்த விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.  

இதையும் படிங்க: School College Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஜூலை 29ம் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்