நடுரோட்டில் ஜல்லிக்கட்டு .....!! ஜல்லிக்கட்டு வீரனாய் களமிறங்கிய காவல் அதிகாரியை தூக்கி எறிந்த காளை....!!

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
நடுரோட்டில் ஜல்லிக்கட்டு .....!!  ஜல்லிக்கட்டு வீரனாய் களமிறங்கிய காவல் அதிகாரியை  தூக்கி எறிந்த  காளை....!!

சுருக்கம்

நடு ரோட்டில் ஜல்லிக்கட்டு  நடத்திய  போலீசார் ...! காவல் அதிகாரியை தூக்கிய காளை....!!

ஜல்லிகட்டுக்கு  அதரவாக, அலங்காநல்லூர்  முதல்,  மெரீனா  வரை  போராட்டம்  சூடு பிடித்துள்ளது. நான்காவது நாளாக  தொடர்ந்து  நடைபெற்று வரும் ஜல்லிகட்டுக்கு  ஆதரவான  போரட்டத்திற்கு  தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது

குறிப்பாக  தமிழகத்தின் பல்வேறு முக்கிய  நகரங்களில்  மாணவர்களின்  போராட்டம்  உச்சகட்டத்தை  எட்டியுள்ளது. போராட்டத்தில்  எந்த   வித  அசம்பாவிதங்களும் ஏற்படாமல்  இருக்க  பல  போலிஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி முன்பு போக்குவரத்து காவல் அதிகாரியை, ஒரு காளை மாடு , ஜல்லிக்கட்டில்  குதித்து  வருவது போல , சும்மா  குதூகலமாக ரோட்டில்  பாய்ந்தது. அப்போது அந்த  காளையை பிடிக்க  , ஜல்லிக்கட்டு  வீரர்கள்  போல், போலீசார்  காளையை சூழ்ந்து  நின்றனர்.

கடைசியில்,  சீரி பாய்ந்த  காளை,   காவல் அதிகாரியை  முட்டியது . இந்த  நிகழ்வு  நடுரோட்டில்  நடைபெற்றதால்,  இந்த  காட்சி பார்பதற்கு போலீசார்  நடத்திய  ஜல்லிக்கட்டு  போன்றே  இருந்தது....

 

                    

PREV
click me!

Recommended Stories

தலைமை ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த பள்ளிக் கல்வித்துறை
41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..