தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்காது - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 03:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்காது - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இளைஞர்களை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை பேருந்துகள் எதுவும் இயங்காது என   போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பீட்டா எதிர்ப்பாக மாறி , பீட்டா அமெரிக்க நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு மறியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டுக்கு செல்லாமல் வீதிகளில், வாடிவாசல் முன்பு , மெரினா கடற்கரையில்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்திற்கு பலமுனை ஆதரவு பெருகி வருகிறது. 20 ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் நாளை போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ , கால்டாக்சி , வாடகை வேன்கள் இயங்காது என்று அறிவித்திருந்தனர். 

தற்போது மாநில அரசு பேருந்துகளும் இயங்காது என தெரிகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக   அண்ணா தொஇழ்ற்சங்கம் தவிர்த்து , சிஐடியூ, தொமுச , ஐஎன்டியூசி, தேமுதிக பேரவை, எச்.எம்.எஸ் உள்ளிட்ட 10 போக்குவரத்து  தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகம் முழுதும் போக்குவரத்து பேருந்துகள் இயங்காத நிலை ஏற்படும். தமிழகம் முழுதும் 8 மாநகர போக்குவரத்து கழகங்கள் உள்ளன , 24000 பேருந்துகள் இஅய்ங்குகின்றன, சென்னையில் மட்டும்  3500 பேருந்துகள் ஓடுகின்றன, 350 மினி பேருந்துகள் ஓடுகின்றன. 

இவைகளில் பெருமாபாலானவை இயங்காது . கோயம்பேட்டிலிருந்து ஒருநாளைக்கு  700 பேருந்துகள் தமிழகம் முழுதும் செல்கிறது. இதுவும் பாதிக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பேருந்து.! பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இல்லை.. ட்விஸ்ட் வைத்த அரசு
பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்