
இன்று முதல் Pepsi மற்றும் Coke விற்பனை அதிரடி நிறுத்தம் : இராசிபுரம் அம்மன் ஹோட்டல் கம்பீர முடிவு ....!
தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என நடத்தப்பட்டு வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்களின் கட்டுக்கடங்கா கம்பீர போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், அனைத்து துறையிலும் அயல் நாட்டு வணிக பொருட்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில், எதை எடுத்தாலும் “இது பாரின் பிராடக்ட்” என பெருமையா சொல்லி பீத்திகொண்டு இருக்கும் மக்கள் ஒருபுரம் இருக்க, “ உங்க பொருளே( பெப்சி மற்றும் கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் ) எங்களுக்கு வேண்டாம், நாங்கள் விற்கவும் மாட்டோம் என கம்பீரமாக முடிவு எடுத்துள்ளது இராசிபுரம் அம்மன் ஹோட்டல்.
குளிர்பான விற்பனையில், மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஹோட்டல் , தற்போது இதுவரை தாங்கள் விற்பனை செய்து வந்த பெப்சி மற்றும் கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள், இன்று முதல் தன் கடையில் விற்பனை செய்ய போவதில்லை என, ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும்இ வகையில் ராசிபுரம் அம்மன் ஹோட்டல் கம்பீர முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவை மக்கள் அனைவரும் பாராட்ட தொடங்கியுள்ளனர். இதே போன்ற முடிவை அனைத்து விற்பனையகங்களும் எடுத்தால் வரவேற்பதாக இருக்கும் என, மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .