
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இளைஞர்களை தொடர்ந்து தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை ஆட்டோ , கால் டாக்சி , வேன் எதுவும் இயங்காது என சாலை போக்குவரத்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பீட்டா எதிர்ப்பாக மாறி , பீட்டா அமெரிக்க நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு மறியுள்ளது. ஜல்லிக்கட்டு ஏதோ சில மாவட்டத்தில் நடக்கும் ஒன்று என்று நினைத்திருந்த , பிரச்சாரம் செய்து வருகிறவர்களின் சதியை முறியடிக்கும் விதமாக இல்லையில்லை இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது, காளைகள் இனத்தை பாதுகாக்கும் விஷயம், தமிழகத்தின் பால் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஒன்று என்று தமிழகத்தின் கடைகோடி இளைஞர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டுக்கு செல்லாமல் வீதிகளில், வாடிவாசல் முன்பு , மெரினா கடற்கரையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்திற்கு பலமுனை ஆதரவு பெருகி வருகிறது. 20 ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் நாளை போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ , கால்டாக்சி , வாடகை வேன்கள் இயங்காது என்று சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.