
ரேப்பிட்டோ பைக் சேவை
இந்தியாவில் பல்வேறு மாநலிங்களில் ரேப்பிட்டோ பைக் சேவையானது செயல்பட்டு வருகிறது. இதே போன்று மதுரையிலும் ரேப்பிட்டோ சேவை இயங்கி வந்த நிலையில் ஓட்டோ ஓட்டுர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரேப்பிட்டோ பைக் சேவையால் தங்களது வாழ்வாதாராம் பாதிக்கப்படுவதாக கூறினர். மேலும் கடந்த 6ஆம் தேதி ரேப்பிட்டோ பைக் ஓட்டும் வகானங்களை ஆர்டிஓ அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்தனர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக மதுரை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகரத்தில் "Rapido Bike Taxi" என்ற கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல் Online Mobile App வழியாக பொதுமக்களிடம் www.rapido.bike என்ற Website மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு,
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட செந்தில் பாலாஜி
பைக்குகள் பறிமுதல்
மோட்டார் வாகன சட்டங்கள்/விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்கள் ஆக்கி மதுரை மாநகரில் அனுமதியற்ற வகையில் Bike Taxi - கள் இயக்கி வருவது தெரிந்து சுமார் 40-ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு. இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. நரேந்திரன் நாயர்., இ.கா.ப. மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், திரு. அனீஸ்சேகர், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அறிவுறைப்படி சட்டப்படி அங்கிகாரம் பெறாத "Rapido Bike Taxi" நிறுவனத்திடம் Mobile App வழியாக தொடர்புகொண்டு வாடகைக்கு இரண்டு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10 ஆயிரம் ரூபாய் அபராதம்
மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள். மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர், திரு. பொன்செந்தில் நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சிங்கார வேலு, (தெற்கு). திருமதி.சித்ரா, (வடக்கு), ஆகியோர்களுடன் இணைந்து "Rapido Bike Taxi" வாகனத்தை பறிமுதல் செய்ய இன்று முடிவு எடுத்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பொதுமக்கள், இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை வாடகை Bike Taxi-க்கு பயண்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
பஞ்சாப் துப்பாக்கி சூடு.! தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பலி- சோகத்தில் உறவினர்கள்