"சென்னைக்கு படையெடுக்கும் போலீஸ் குடும்பத்தார்" - முதல்வரிடம் மனு அளிக்கின்றனர்.. வைரலாகும் வாட்ஸ்அப் மெசேஜ்

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 09:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
"சென்னைக்கு படையெடுக்கும் போலீஸ் குடும்பத்தார்" - முதல்வரிடம் மனு அளிக்கின்றனர்.. வைரலாகும் வாட்ஸ்அப் மெசேஜ்

சுருக்கம்

police family petition to CM

போலீசாருக்கு சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று  தலைமை செயலகத்துக்கு பேரணியாக சென்று முதலமைச்சரை  சந்தித்து மனு கொடுப்போம் என்று கடந்த வாரம் சென்னையில் பல இடங்களில் போலீஸ் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இன்று  முதல் 3 நாட்கள் சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களும் விடுமுறை எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பேரணியை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று காவல் உயர் அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் போலீஸ் குடும்பத்தார் திரள திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ் புக் , வாட்ஸ் அப்புகளில் பரவும் தகவல்கள் இதுதான்…. 
1979ம் ஆண்டிற்கு அடுத்த படியாக தமிழக காவலா் துறையில் அடிமைதனம் ஒழிக்கும் சரித்திர நாளாக அமைய போகிறது 2017.

நாள்-06/07/2017
நேரம்-10:30 காலை மணியளவில்
இடம்-தலைமை செயலகம் முன்னிலையில்.

(காவலா்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்)

காவலா்களின் தொப்புள் கொடி உறவுகளே நம் உரிமைகளை மீட்டெடுக்க,
மக்களுக்கு புதியோதோர் காவல்துறையை உருவாக்க அணி திரண்டு வாரீா்.

நமது கோரிக்கை மற்றும் குறைகளை களைய கோரி தமிழக முதல்வரிடம் மனு கொடுப்போம்.

மனு கொடுக்க வரும் காவலா் குடும்பங்களுக்கு ஆதரவாக பலர் அங்கு இருப்பா்.

அன்றைய தினம் தலைமை செயலக பணியிலிருக்கும் காக்கி சொந்தங்களே வருவது நம் பெற்றோர், நம் உடன் பிறப்புக்களே அதை ஒரு கணமும் மறவாதீா்.

ஆணவத்தின் வஞ்சனையால் நம் தொப்புள் கொடி உறவுகளை தாக்கும் அபாயம் ஏற்படாலாம்.

காக்கி சொந்தங்களே வயதான பெற்றோரும், நம் உடன் பிறப்புகள் வந்திருப்பதும் எங்களின் அடிமை தனத்தை ஒழிக்க அல்ல.

நமது அடிமைதனத்தை ஒழிக்க.

காவல் சொந்தங்கள் மனு கொடுக்க செல்லும் போது தடுக்கப்பட்டால் அருகிலிருக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக அன்பா்களுக்கு தகவல் தெரிவியுங்கள்.

அங்கு நடக்கும் நிகழ்வுகளை வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி வழியாக தகவல் தெரிவியுங்கள்.

காவலா் சொந்தங்கள்  உள்வராதபடி பார்த்து கொள் என உத்தரவு பிறப்பித்தால் கண்டிப்பாக அதற்கு நீங்கள் கீழ்படியுங்கள் ஆனால் நமது உறவுகள் மேல் கோபத்தை காட்டி விடாதீா்கள்.

மேலும் உளவுதுறை மற்ற பிரிவு சொந்தங்களே உங்களது தந்திரமான பேச்சால் மனு கொடுக்க வந்திருக்கும் நமது உறவுகளை குழப்பாதீர்.

ஆணவ அதிகாரிகளின் கட்டளையை ஏற்று காட்டி கொடுக்கும் இனமாக மாற வேண்டாம்.

காவலா் துறைக்கு விடுதலை வாங்கி தர செல்லும் எமது அருமை சொந்தங்களே யாரேனும் எப்படி நீங்கள் இங்கு வந்தீர்கள் என விவரம் கேட்டால்
தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் கேள்விபட்டு நான் இங்கு வந்தேன் என கூறவும்.

மேலும் தங்களின் கோரிக்கைகள் என்ன என்பதனை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

மேலும் அனைவரும் முடிந்தளவு பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும்.

காவலர் நலனுக்காக பாடுபடும் இந்த முகநூல் பக்கம் முடக்க வாய்ப்புண்டு எனவே நமது குறிக்கோளில் யாரும் பின் வாங்க வேண்டாம். என அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக..! திமுகவை வீழ்த்த.. கூட்டாக சூளுரைத்த அன்புமணி, இபிஎஸ்
வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!