தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைப்பது, கடலோர மாவட்டங்களில் சோதனை மேற்கொள்ளுவது ஆகிய பாதுகாப்புப் பணிகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், கடலோர மாவட்டங்களில் சோதனை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளும் தீவீரமாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை உள்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிர சோதனைகளை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். மத மோதல்கள் இல்லாத அமைதிப் பூங்காவாக மாநிலம் இருப்பதாவும், இதற்கு உளவுப் பிரிவின் முயற்சியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Breaking: விருதுநகரில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; இளம்பெண் பலி
"கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மாநில அரசு விரைவாகக் கைது செய்ததுடன், சர்வதேச அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்தது. மூன்று நாட்களில் இதுபோன்ற வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்" என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
"தீவிரவாத குழுக்களால் தீவிரவாதிகளாக உருவாகால் இளைஞர்களை பாதுகாக்க மத அறிஞர்கள், உளவியலாளர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சுமார் 20 இளைஞர்கள் சீர்திருத்தப்பட்டுள்ளனர்” என முதல்வர் கூறினார்.
காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர், கடந்த அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் காவல் நிலைய மரணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்றார். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்ததை அடுத்து நடந்த போராட்டங்களை அரசு திறம்பட கையாண்டதாவும் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
இப்தார் விருந்து ஏன்? ரமலானில் இஸ்லாமிய நண்பர்களுக்கு உதவ இதைத் தெரிஞ்சுக்கோங்க!
"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது யார் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் ஏன் பதிலளிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தாக்கப்படுவதாக வந்த வதந்திகளுக்கு எதிராக அரசு துரித நடவடிக்கை எடுத்ததால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டதாகவும் முதல்வர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திமுக வழக்கறிஞர்கள் வழங்கிய சட்ட உதவியை எடுத்துக்கூறிய ஸ்டாலின், இந்த வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த பழனிசாமியையும் சேர்த்துள்ளோம் எனவும்
தற்போது நடைபெற்றுவரும் சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பேச்சை இருட்டடிப்பு செய்வதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரின் பதிலுரையைப் புறக்கணித்தனர்
Mann Ki Baat : தமிழ்நாடு, தமிழ் மொழி பற்றி பிரதமர் மோடி இத்தனை விஷயம் சொல்லிருக்காரா..?