Tasmac : பள்ளிகொண்டா அருகே டாஸ்மாக் கடையில் அடாவடி வசூல் வேட்டை! - மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு!

By Dinesh TG  |  First Published Apr 22, 2023, 3:49 PM IST

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ளது கந்தனேரி மதுபான விற்பனை கடை. இந்த மது கடையில் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கொண்டு 130ரூபாய்க்கு விற்க வேண்டிய மது பாட்டிலை, பத்து ரூபாய் சேர்த்த, 140 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று நண்பகல் செய்தியாளர்கள் சிலர் கந்தனேரி டாஸ்மாக் மதுபான கடைக்குச் சென்று கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதன் விளக்கத்தை கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த மேற்பார்வையாளர் நாங்கள் அப்படித்தான் விற்போம். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று ஒருமையிலும், தகாத வார்த்தைகளிலும் பதில் அளித்துள்ளனர்.

செய்தியாளர்கள் தரப்பில் இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஃபேக்ஸ் மற்றும் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இப்படி பல கிராமங்களில் உள்ள கடைகளில் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மாவட்ட மேலாளர் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரியுடன் இணக்கமாக கைகோர்த்துக் கொண்டு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்து வருவது ஒரு தொடர்கதையாகவே மாறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய விலையை நிர்ணயித்து அதன்படி விற்பனை செய்ய வேண்டும் என்றும் மதுப்பிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்தடிமையாக்கும் 12 மணி நேர பணி சட்டம்.. தவறானது.. ஏத்துக்கவே முடியாது.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!
 

Tap to resize

Latest Videos

click me!