பாம்பின் தலையை கடித்து துப்பிய சம்பவம்! 3 பேர் அதிரடி கைது!

By Dinesh TG  |  First Published Apr 6, 2023, 10:48 AM IST

ராணிப்பேட்டையில் பாம்பை பிடித்து, அதன் தலையை கடித்து கொலை செய்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


ராணிப்பேட்டையில் ஒருவர் பாம்பை பிடித்து, அதன் தலையை கடித்து துப்புவது போன்றும், அதனை இருவர் வீடியோ பதிவு செய்தனர்.

அந்த வீடியோவில் கைனூரை் சேர்ந்த மோகன், சிறிய பாம்பு ஒன்று தன் கையில் கடித்ததாகக் கூறி, அதற்கு பழிவாங்க போவதாக கூறுகிறார். பாம்பை விடுமாறு மற்ற இருவரும் வற்புறுத்திய போதிலும், மோகன் மறுத்து பாம்பின் தலையை கடித்து துப்புகிறார். மூன்று நபர்களும் பாம்பின் வெட்டப்பட்ட தலை மற்றும் ரத்தம் தெறிக்கும் உடலையும் படம்பிடிக்கும்போது சிரித்து மகிழ்கின்றனர்.



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர்.

அதன் பேரில், ஆற்காடு ரேஞ்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபர்களை கைது செய்தனர். அவர்கள் கைனூரில் வசிக்கும் மோகன், சூர்யா, சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விலங்கு துன்புறுத்தல் மற்றும் வனவிலங்கைக் கொன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை... சென்னை மாநகராட்சி அதிரடி!!

 

click me!