வேலூர் கோட்டையில் பெண் மிரட்டப்பட்ட விவகாரம்; இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தை முற்றுகை

By Velmurugan s  |  First Published Mar 30, 2023, 8:13 PM IST

வேலூர் கோட்டையில் பெண்ணின் பர்தாவை அவிழ்க்கச் சொல்லி மிரட்டல் விடுத்து வீடியோ எடுத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி வடக்கு காவல் நிலையத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய பெண் ஒருவர் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை 2 இஸ்லாமிய இளைஞர்களும் 2 இந்து இளைஞர்களும் சேர்ந்து கொண்டு மிரட்டி செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.

மேலும் பர்தாவை அவிழ்க்கச் சொல்லியும், வீடியோவில் முகத்தை காட்டச் சொல்லியும் மிரட்டி வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவானது சமூக வளைதலங்களான வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகளில் தற்போது வேகமாக பரவிவருகிறது. இது பெண்களின் சுதந்திரத்தை  அடக்கி ஒடுக்குவதாகவும். அவர்களை கொச்சைப்படுத்திய 2 இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் 2 இந்து இளைஞர்கள் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் வடக்கு காவல் நிலையத்தை பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து தர்ணாவும் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!