
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்குவால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அதனால் கிராமம் கிராமமாக சென்று சுகாதாரத்துறை நிலவேம்பு கசாயம் அழிப்பதோடு டெங்குவை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் டெங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறி வருகின்றது.
ஆனால் சேலத்தில் மட்டும் டெங்குவுக்கு 9 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஓமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த கணேஷ்ராஜ் என்பவரை வடசென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அயோத்தியாபட்டினத்தில் ரமேஷ் என்ற போலி மருத்துவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.