சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது.. குற்றாலத்தில் தட்டி தூக்கிய போலீஸ்- காரணம் என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jul 11, 2024, 10:03 AM IST

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தில் பிரச்சாரத்தில் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.


சாட்டை துரைமுருகன் அவதூறு கருத்து

திமுக அரசுக்கு எதிராகவும் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்தும் யுடியூப் பக்கத்தில் சாட்டை துரைமுருகன் தினமும் வீடியோ பதிவிட்டு வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி  நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

சவுக்கு சங்கர் மீது இத்தனை செக்சனில் வழக்கா? குண்டர் சட்டம் பாய்கிறதா? உடைத்து பேசிய சாட்டை துரைமுருகன்!

குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது

குற்றாலத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதனையடுத்து போலீஸ் வாகனத்தில் திருச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பாஜகவை சேர்ந்த குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக 2021ம் ஆண்டு தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுவிக்கப்பட்டார். 

ADMK EPS : எடப்பாடியை புறக்கணித்தார்களா அதிமுக தொண்டர்கள்.! விக்கிரவாண்டி தேர்தலில் நடந்தது என்ன.?

click me!