சென்னை கமிஷனரை மாத்திட்டா க்ரைம் குறைஞ்சிடுமா? CM குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை! TTV.தினகரன்!

Published : Jul 11, 2024, 09:37 AM ISTUpdated : Jul 11, 2024, 10:23 AM IST
சென்னை கமிஷனரை மாத்திட்டா க்ரைம் குறைஞ்சிடுமா? CM குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை! TTV.தினகரன்!

சுருக்கம்

தினந்தோறும் 4 கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை செய்வது 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளார்கள். 5000, 10,000க்கும் கொலைகள் நடக்கும் கேவலமான நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. 

ரூ.5,000, 10,000 கொடுத்தால் கொலை செய்கின்ற கூலிப்படைகளாக நிறைய இளைஞர்கள் மாறுகின்றனர் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு மட்டுமல்ல யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உண்மையில் சொல்ல போனால் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது.

இதையும் படிங்க: AIADMK EPS : மக்களவை தேர்தல் தோல்வி.. புலம்பிய நிர்வாகிகள்.. எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன் என்ன?

தினந்தோறும் 4 கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை செய்வது 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளார்கள். 5000, 10,000க்கும் கொலைகள் நடக்கும் கேவலமான நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், கஞ்சா, போதை கலாச்சாரத்தால், இளைஞர்கள் அடிமையாகி, கூலிப்படைகளாக மாறிவருவது வருத்தத்துக்குரியதாகும்.  எனவே, படிப்படியாக மது விலக்கை கொண்டு வந்தால்தான் மட்டும் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும்.

இதையும் படிங்க: நிவாரணம் கொடுத்துட்டா மட்டும் கடமை முடிஞ்சது நினைக்காதீங்க! இந்த விபத்துக்கு திமுக தான் காரணம்! டிடிவி.தினகரன்

சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி விட்டால் மட்டும் எல்லாம் மாறி விடாது. சீர்கெட்டு கிடக்கும் சட்டம் - ஒழுங்கை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒன்றாக இணையவேண்டும். காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது, அவர்களிடம் பேசி தண்ணீர் பெற்று தரவில்லை, மேகதாது அணை கட்டுவதையும் தடுக்கவில்லை. காங்கிரஸிடம் காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு