அதெல்லாம் இருக்கட்டும்! ஆருத்ராவிற்கும் பாஜகவிற்கும் என்ன தொடர்பு? IPSக்கு எதிராக சீனாக சீனுக்கு வரும் IAS!

By vinoth kumarFirst Published Jul 11, 2024, 8:25 AM IST
Highlights

பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியலை செல்வப்பெருந்தகை வெளியிட்டு விமர்சித்த நிலையில், அவர் மீதான வழக்குகள் குறித்து அண்ணாமலை பகிர்ந்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார். 

ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தனிமனித தாக்குதலை நடத்துகிறார் அண்ணாமலை என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை Vs தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியலை செல்வப்பெருந்தகை வெளியிட்டு விமர்சித்த நிலையில், அவர் மீதான வழக்குகள் குறித்து அண்ணாமலை பகிர்ந்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார். 

Latest Videos

இதையும் படிங்க: குண்டாஸ் வழக்கில் ஜெயிலுக்கு போன உங்களை வாழும் மகாத்மா என அழைக்கவா? செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை கேள்வி!

இந்நிலையில் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter'"அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தளத்தில்: பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்ன விலை என கேட்கும் அதிபுத்திசாலி அண்ணாமலை, ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தனிமனித தாக்குதலை நடத்துகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள மிக மோசமான பிரிவுகளான

1. IPC 506
கிரிமினல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்
2. IPC பிரிவு-153A/1
வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல், வெடிபொருள் பயன்படுத்துதல், சதி செய்தல் 
தொடர்பான குற்றச்சாட்டுகள், 
3. IPCபிரிவு-153B/ 2
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் 
இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல்
4. IPC பிரிவு-500
அவதூறுக்கான தண்டனை தொடர்பான குற்றச்சாட்டுகள் 
5. IPC பிரிவு-503/1
குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் 
6. IPC பிரிவு-504/1
அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பேசுதல், செயல்படுதல், வேண்டுமென்றே அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் 
7. IPC பிரிவு-427
ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல், தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள்
8. IPC பிரிவு-499
 அவதூறு செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்
9. IPC பிரிவு-188
பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை தொடர்பான குற்றச்சாட்டுகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter'"அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா?

இதையும் படிங்க:  ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜகவை பாதுகாத்தவர் யார்? அடுக்கடுக்கான சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி!

பாட்டி வடை சுட்ட கதை சொல்லாமல் ஆருத்ராவிற்கும் பா.ஜ.க மற்றும் அமர்பிராத் ரெட்டி, R.K. சுரேஷ் மற்றும் ரவுடி ஆற்காடு சுரேஷ்'கும் உள்ள தொடர்பு குறித்து பதில் சொல்லுங்க சார்.  சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கு காந்திய வழியில் செல்பவர்கள் கிரிமினல்களாகத் தான் தெரிவார்கள் என கூறியுள்ளார். 

click me!