மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 19-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்க திட்டமிட்டிருந்தார்.
தேர்தல் தோல்விக்கு பலமற்ற கூட்டணியே காரணம் என எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிர்வாகிகள் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதாவது அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம் என மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 19-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் தேர்தல் தோல்விக்கு பலமற்ற கூட்டணியே காரணம் என எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: அண்ணனை இழந்த வேதனையில் திமுகவை பா.ரஞ்சித் அப்படி பேசிட்டாரு! அவரே வாபஸ் வாங்கிருவார்! போஸ் வெங்கட்!
தோல்விக்கு காரணம் என்ன.?
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். கூட்டணி அமைப்பதை தலைமை பார்த்துக்கொள்ளும். தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள். எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ அங்கே எல்லாம் சரி செய்யுங்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2026 சட்டமன்றதேர்தலுக்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: Annamalai: ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவேன்; நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு தொடர்ந்த அண்ணாமலை
குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை என கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.