கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..? பேராசிரியர் ஹரி பத்மனை அதிரடியாக கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Apr 3, 2023, 8:46 AM IST
Highlights

கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹரிபத்மனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கலாஷேத்திரா- பாலியல் தொல்லை

சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்திரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகளிர் ஆணையம் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.அப்போது பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால்  ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகள் வலியுறுத்தியிருந்தனர்.  இந்த சம்பவம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர் பலி.! ஆளுநர் ரவி தான் முழு பொறுப்பேற்க வேண்டும் -செல்வப் பெருந்தகை

முன்னாள் மாணவி பாலியல் புகார்

அரசைப் பொறுத்தவரை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பேராசிரியர் ஹரிபத்மன் கல்லூரியில் படித்த போதும், படிப்பு முடித்த பிறகும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பேராசிரியர் ஹரி பத்மன் கைது

மேலும், இந்த வழக்கு தொடர்பாக  ஹரிபத்மனைக் கைது செய்ய போலீஸார் முயற்சித்தனர். கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 30 ஆம் தேதி மாணவ, மாணவிகளோடு ஹரி பத்மன் ஹைதராபாத் சென்றிருந்தது தெரியவந்தது. நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பியவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து ஹரிபத்மனை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் இன்று காலை பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையை குறி வைக்கும் பாஜக..! தன் மகனுக்காக அலறும் ஜெயக்குமார்

click me!