சுங்க கட்டண உயர்வுக்கு கண்டனம்... லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!!

By Narendran S  |  First Published Apr 2, 2023, 9:19 PM IST

சங்கச்சாவடிகளின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


சங்கச்சாவடிகளின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கச்சாவடிகள் கட்டணம், ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டிக்கான சுங்கச்சாவடி கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.50 கோடி சொத்து வரி வசூலித்த சென்னை மாநகராட்சி… ராயபுரத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூல்!!

Tap to resize

Latest Videos

undefined

இந்த சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து 5 முதல் 55 ரூபாய் வரை கட்டணம் உயரும் என கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. 

இதையும் படிங்க: சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து - போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் படை

இந்த நிலையில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுங்கச்சாவடியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

click me!