ஜூலை 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... எதற்காக தெரியுமா?

Published : Jul 13, 2022, 06:26 PM IST
ஜூலை 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... எதற்காக தெரியுமா?

சுருக்கம்

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழாவில் கலந்துக்கொள்வதற்காக வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழாவில் கலந்துக்கொள்வதற்காக வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28 ஆம் தேதி பிரம்மாண்ட 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதனால் பிற நாடுகளின் கவனம் மாமல்லபுரத்தின் மீது திரும்பியுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்.. மதுரை காமராஜர் பல்கலை வெளியே பரபரப்பு.

இந்த போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக வரும் 28 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, தொடரை தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஏற்கெனவே செஸ் ஒலிம்பியாட்டிற்கான ஜோதி பிரதமர் மோடியால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு... என்ன காரணம் தெரியுமா?

இந்த தொடக்க விழாவில், தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பங்களிப்பாக ரூ.92 கோடி நிதி வழங்கியுள்ளது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற போது, அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!