
பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வாழ்த்து கூறி, கடிதம் அனுப்பியுள்ளார் என, அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 9ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறினர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, அன்புமணி ராமதாசுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய வாழ்த்து மடல் குறித்து, அன்புமணி ராமதாஸ், தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
"இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் எனக்கு தமிழில் அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்து"
----------------------------
உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
வாழ்த்துக்களுடன்,
தங்கள் நேர்மையான,
நரேந்திர மோடி