சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வணக்கம் தமிழ்நாடு என்று உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் பிரதமர் மோடி.சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தையும், சென்னை கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச தொடங்கினார். அப்போது, “வணக்கம் தமிழ்நாடு என்று உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. தமிழகத்துக்கு வருவதே மகிழ்ச்சி தான். ஒரு கொண்டாட வேலையில் நான் இங்கு வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். இன்னும் சில நாட்களில் தமிழ் புத்தாண்டை கொண்டாட உள்ளோம்.
இதையும் படிங்க..முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக..காங்கிரஸ் அப்செட்! யாரு தெரியுமா? ராஜாஜி கொள்ளுப்பேரன் தான் அது !!
Elated to launch various development initiatives from Chennai, which will greatly benefit the people of Tamil Nadu. https://t.co/QDU9bDnDkT
— Narendra Modi (@narendramodi)புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை, புதிய தொடக்கத்திற்கான நேரம் இது. பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை, புதிய தொடக்கத்திற்கான நேரம் இது.. பல திட்டங்களை தொடங்கியுள்ளோம், வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். விமானம், ரயில், சாலை என பல கட்டமைப்பு திட்டங்களை தொடங்கியுள்ளோம்..
பட்ஜெட்டில் கட்டமைப்பிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது: இது 2014 ஒதுக்கீட்டை விட 5 மடங்கு அதிகம். ரயில்வே கட்டமைப்பிற்கும் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் அதிக நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. 2014உடன் ஒப்பிடுகையில் இது இரட்டிப்பாக்கியுள்ளது” என்று பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிங்க..திருக்குறள் கருத்து.. ஹீரோ விவேகானந்தர்.! அடுத்த 25 வருஷம் பிளான் இதுதான் - மாஸ் காட்டிய பிரதமர் மோடி
இதையும் படிங்க..வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறையுங்க..மக்கள் பாவம்! பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்