Breaking: மதுரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் மரணம்

By Velmurugan s  |  First Published Apr 8, 2023, 7:00 PM IST

மதுரை மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் சஞ்சீவ் குமார் திடீர் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.


கர்நாடகா மாநிலம் பிடார் மாவட்டத்தின் பசவகல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 40). இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பணியாற்றி வந்தார். அலகாபாத்தில் பணியாற்றி வந்த சஞ்சீவ் குமாருக்கு கடந்த சில தினங்களாக மதுரை மாவட்டத்தில் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

Tap to resize

Latest Videos

undefined

வாகன ஓட்டிகளிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

வழக்கம் போல இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த சஞ்சீவ் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த சக வீரர்கள் அவருக்கு முதலுதவி அளித்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சீவ் குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மதுரையில் பயிற்சி பெற்று வந்த ராணுவ வீரர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!