பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை புதிய விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அடுத்ததாக பிரதமர் மோடி பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும்.
இதையும் படிங்க..திருக்குறள் கருத்து.. ஹீரோ விவேகானந்தர்.! அடுத்த 25 வருஷம் பிளான் இதுதான் - மாஸ் காட்டிய பிரதமர் மோடி
மாநில அரசின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும். சாலை கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசின்பங்கு நிலுவையில் உள்ளது, காலதாமதமின்றி நிறைவேற்றித் தர வேண்டும். எனவே தமிழ்நாட்டுக்கு புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியையும் அதிகரித்து தர வேண்டும் என்று பிரதமர் மோடி முன்னிலையில் கோரிக்கை வைத்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
இதையும் படிங்க..முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக..காங்கிரஸ் அப்செட்! யாரு தெரியுமா? ராஜாஜி கொள்ளுப்பேரன் தான் அது !!