
பிரதமர் மோடி சென்னை வருகை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உற்சாகமாக வரவேற்றார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்கிறார். இந்த பிரம்மாண்ட கூட்டத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியில் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.