வரலாற்றில் முதல் முறையாக....."பிள்ளையாருக்கு" ஸ்மார்ட் கார்டு வழங்கி கௌரவித்த அதிகாரிகள்..!

Asianet News Tamil  
Published : Sep 18, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
வரலாற்றில் முதல் முறையாக....."பிள்ளையாருக்கு"  ஸ்மார்ட் கார்டு வழங்கி கௌரவித்த அதிகாரிகள்..!

சுருக்கம்

pilliyar received smart card from tamilnadu govt

ஸ்மார்ட் கார்டு வழங்குவதிலும் சரி, பெறுவதிலும் சரி  ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு சுவாரஸ்யம்  வெளி வருகிறது.அதாவது தெய்வமாக வழிபடும் சிவன் பார்வதிக்கு இரண்டு  மகன்கள் உள்ளதாக  கூறுவர்

அதில் ஒருவர் பிள்ளையார், மற்றொருவர்  முருகப்பெருமான்.முருகர்  எப்படியோ  அவருடைய திறமையால் திருமணம்  செய்துகொண்டார்.அதுவும் கூட அவருக்கு இரண்டு மனைவிகள் என்றால் பாருங்களேன். அது சரி  இப்ப நம்ம பிள்ளையாருக்கு  வருவோம் .

ஒத்தக்கட்தை  பிள்ளையார்

திருமணம்  ஆகாமல்  இதுவரை ஒத்தக்கட்டையாக  வலம் வரும்  பிள்ளையார்  கொழுக்கட்டை சாபிட்டே காலத்தை  ஓட்டுகிறார்.தற்போது இதற்கெல்லாம் மாறாக அவருக்கு தமிழக  அரசு  மின்னணு குடும்ப அட்டையை தமிழக வழங்கி கௌரவித்துள்ளது 

ஒத்தக்கட்டையாக இருக்கும்  எவருக்கும்  ஸ்மார்ட் கார்டு கிடையாது  என்பது  சட்டவிதி. அதனையும்  மீறி பிள்ளையார் மீது அனுதாபம் கொண்ட புண்ணியவான் அவருக்கு  ஸ்மார்ட் கார்டு  வழங்கி  இருக்கிறார்

இனி  கொழுக்கட்டை  செய்வதற்கு தேவையான  அரிசியை, இந்த  ஸ்மார்ட்  கொண்டு  வாங்கி  பயன்பெறுவார்  பிள்ளையார்  என  நம்பப்படுகிறது. விரைவில் இவருக்கு ஆதார் எண்ணும் கிடைக்க வேண்டும் என்பதே  அனைவரின் ஆசையும்.

குறிப்பு

விநாயகர் புகைப்படம் போட்ட மின்னணு குடும்ப அட்டையை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பது  வரலாற்றில் கடவுளுக்கே குடும்ப அட்டை கொடுத்த பெருமை நமது அரசுக்கு உண்டு. இந்த குடும்பம் அட்டையை வழங்க விவரங்களை திரட்டிய அதிகாரியை நீங்கள் பார்த்தால் விநாயகரை பார்த்தற்கு சமம். இன்னும் பல கூத்துக்கள் இந்த ஸ்மாட் குடும்ப அட்டை வழக்குவதில் நடைபெற்றுள்ளது. வெளிச்சத்திற்கு பொறுமையாக வரும் காத்திருங்கள்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!