
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தபட்டுள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டீன் நாராயண பாபு, குழந்தையை கண்டுபிடிக்க தேவையான உதவிகளை காவல்துறைக்கு வழங்கி வருவதாகவும் இன்று இரவுக்குள் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் சில நாட்களுக்கு முன்பு கர்பிணியாக இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தங்கி குழந்தை பெற்று கொண்டார். அங்கு பெண் பணியாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அந்த பெண் பணியாளரிடம் மணிமேகலை வேலை கேட்டுள்ளார். அந்த பெண் மூலம் இன்னொரு பெண் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து , பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் மணிமேகலை குழந்தையுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
ஆனால் அந்த குழந்தை திடீரென காணாமல் போனது. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் பணியாளர் ஒருவர் குழந்தையுடன் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டீன் நாராயண பாபு, குழந்தையை கண்டுபிடிக்க தேவையான உதவிகளை காவல்துறைக்கு வழங்கி வருவதாகவும் இன்று இரவுக்குள் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.