சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தை கடத்தல் - போலீசார் விசாரணை...

 
Published : Sep 18, 2017, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தை கடத்தல் - போலீசார் விசாரணை...

சுருக்கம்

The girl was kidnapped at Rajiv Gandhi Government Hospital in Chennai. There is a tension in the girl who has been born for 15 days since she was born.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தபட்டுள்ளதாக  போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தபட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் சில நாட்களுக்கு முன்பு கர்பிணியாக இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தங்கி குழந்தை பெற்று கொண்டார். அங்கு பெண் பணியாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து அந்த பெண் பணியாளரிடம் மணிமேகலை வேலை கேட்டுள்ளார். அந்த பெண் மூலம் இன்னொரு பெண் பழக்கம் ஏற்பட்டுள்ளார். 

இதையடுத்து , பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் மணிமேகலை குழந்தையுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். 

ஆனால் அந்த குழந்தை திடீரென காணாமல் போனது. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் பணியாளர் ஒருவர் குழந்தையுடன் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!