பிஎப்ஐ அமைப்புக்கு தடை.. கோவையில் குவிந்த இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தால் பரபரப்பு.. எச்சரித்த போலீஸ்.!

By vinoth kumarFirst Published Sep 28, 2022, 2:27 PM IST
Highlights

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதை எதிர்த்து காவல்துறையினரின் உத்தரவையும் மீறி கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதை எதிர்த்து காவல்துறையினரின் உத்தரவையும் மீறி கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் உள்ளிட்ட புகாரை அடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 15 மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க;- pfi banned in india: பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் என்ன? பட்டியலிடும் மத்திய அரசு

இந்நிலையில், நாடு முழுவதும் 2-வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்றும் சோதனை நடைபெற்றது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது . இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் 5 வருடம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் அறிவுறுத்தலையும் மீறி கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்டபட்டது. 

இதையும் படிங்க;- PFI ban: nia:pfi india: பிஎப்ஐ அமைப்பு, துணை அமைப்புகளுக்கு தடை ஏன்? மத்திய அரசின் 10 காரணங்கள்

click me!