
பெட்ரோல் டீசல் விலையை கடந்த 2 மாதங்களில் 6-வது முறையாக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. இதன்படி, பெட்ரோல் 89 காசுகளும், டீசல் 86 காசுகளும் விலை உயர்ந்தது. இந்த புதிய விலைஉயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. , சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் மாதந்தோரும் இருமுறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, பெட்ரோல், மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 89 காசுகள், மற்றும் வரிகள் சேர்த்து இனி ரூ.67.13 காசுக்கும், டீசல் 86 காசுகள் விலை உயர்ந்து ரூ. 58.02 காசுக்கும் விற்கப்படும்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை 6-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2மாதங்களில்பெட்ரோல் விலை மட்டும் ரூ. 7.63 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
டீசல் விலை உயர்த்தப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது 3-வது முறையாகும். இதற்கு முன் கடந்த மாதம் 16-ந்தேதி ரூ.2.77 காசுகள் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் டீசல் விலை ரூ.3.90 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.