கூர்நோக்கு இல்ல சிறார்களின் விளையாட்டுத்திறன் மேம்பட கார்பரேட் நிறுவனங்கள் உதவ வேண்டும் - நீதிபதிகள் வேண்டுகோள்

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
கூர்நோக்கு இல்ல சிறார்களின் விளையாட்டுத்திறன் மேம்பட கார்பரேட் நிறுவனங்கள் உதவ வேண்டும் - நீதிபதிகள் வேண்டுகோள்

சுருக்கம்


கூர்நோக்கு இல்லங்களில் இருக்கும் சிறார்கள் விளையாட்டுத்திறன் மேம்பட அவர்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டும் என இளஞ்சிறார் நீதி குழும நீதிபதிகள் வேண்டுகோள் வைத்தனர்.

தமிழகம் முழுதும் கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்பட்டுள்ள இளஞ்சிறார்கள் திறமையை வெளிக்கொணறும் வகையில் அவர்களுக்கு கல்வி அளித்தல் பணி மட்டுமல்ல விளையாட்டு திறமைகளையும் வெளிகொணரும் வகையில் தமிழகம் முழுதும் கூர்நோக்கு இல்லங்களில் இருக்கும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள்  நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. 

 

இந்த விளையாட்டு விழா நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இளஞ்சிறார் நீதி குழும நீதிபதிகள் மணிக்குமார் ,மாலா ஆகியோர் கலந்து கொண்டனர். நான்கு மண்டலங்களிலும் விளையாட்டில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 14 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெருகிறது.

இதில் தமிழகம் முழுதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களிலிருந்து 2000 சிறார்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் கலந்துகொண்ட நீதிபதிகள் தங்கள் சொந்த செலவில் சிறார்களுக்கு உடைகள் வாங்கி கொடுத்தனர். 

ஜெ.ஜெ கமிட்டியின் தலைவர்  நீதிபதி மணிக்குமார் பேசும்போது தமிழகத்தில் அரசு கூர்னோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர் சிறுமியரின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கார்பரேட் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். அவர்கள் விளையாட்டு திறமை மிகுந்த கூர்நோக்கு இல்ல குழந்தைகளை தத்து எடுத்து அவர்கள் திறமைகளை மேலும்மெருகேற்ற உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.


மன அளவில் மற்ற குழந்தைகளோடு கூர் நோக்கு இல்லத்தில் இருப்பவர்கள் ஒப்பிட்டு தாழ்த்தி மதிப்பிட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அரசு கூர் நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர் சிறுமியரின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு விட கூடாது என்பதே இளங்சிறார் நீதிக் குழுமத்தின்  ஜெ ஜெ கமிட்டியின்   முக்கிய நோக்கம் என்று நீதிபதி மாலா தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!