103 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை…. செம அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

By manimegalai aFirst Published Oct 17, 2021, 8:14 AM IST
Highlights

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாயை கடந்துள்ளது வாகன ஓட்டிகளை செமத்தியாக அதிர வைத்துள்ளது.

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாயை கடந்துள்ளது வாகன ஓட்டிகளை செமத்தியாக அதிர வைத்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுகிறது. நாள்தோறும் விலையை நிர்ணயித்து எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை அறிவித்து வருகின்றன.

இந் நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூ. 103.01 காசுகளாக இருக்கிறது. டீசல் விலையும் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ. 98.92 ஆக உள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது இது 16வது முறையாகும். தொடரும் இந்த விலையேற்றத்தால் நடுத்தர குடும்பத்தினரும், வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

click me!