சபாநாயகர் பதவியினை சந்திரபாபு நாயுடு பெறமுடியவில்லை என்றால் அவரது கட்சியும் நிதிஷ் குமார் கட்சியும் எந்த நேரத்திலும் இரண்டாக உடைக்கப்படும். அது தெரிந்துதான் சந்திர பாபு நாயுடு சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கூட்டணி ஆட்சி
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 400 தொகுதிகளை இலக்காக கொண்டு களம் இறங்கிய பாஜகவிற்கு 240 தொகுதிகள் மட்டுமே தனித்து கிடைத்தது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தநிலையில் மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுத்தாலும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு சபாநாயகர் பதவியை கேட்டு பிடிவாதமாக உள்ளனர். அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுத்தும் சபாநாயர் பதவே கேட்பது ஏன் என் கேள்வி எழுந்துள்ளது.
சபாநாயகர் பதவி: சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கும் பாஜக - யார் இந்த புரந்தேஸ்வரி?
சபாநாயகர் பதவி கேட்பது ஏன்.?
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், உள்துறை, ராணுவம்,வெளியுறவு, நிதி,தொழில்துறை, வாணிபம்,வேளாண்மை,கூட்டுறவு,ரயில்வே,தகவல் தொழில் நுட்பம்,தொலை தொடர்பு,கல்வி, மக்கள் நல்வாழ்வு, பாராளுமன்ற விவகாரங்கள்,செய்தி மற்றும் விளம்பரத் துறை, பணியாளர் நலன் என்று எந்த முக்கியமான துறையையும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க மறுத்துவிட்ட மோடி,
சபாநாயகர் பதவியினை சந்திரபாபு நாயுடு பெறமுடியவில்லை என்றால் அவரது கட்சியும் நிதிஷ் குமார் கட்சியும் எந்த நேரத்திலும் இரண்டாக உடைக்கப்படும். அது தெரிந்துதான் சந்திர பாபு நாயுடு சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்! என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.