குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கோரி வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்…

 
Published : Jul 15, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கோரி வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்…

சுருக்கம்

People with pedestrians demand a drinking water requirement

திருவண்ணாமலை

குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கோரி திருவண்ணாமலையில் வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட குபேரன் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கடும் வறட்சியின் காரணமாக வறண்டு கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் குடிநீர் தேடி அலைகின்றனர்.

இதனால் சினம் கொண்ட மக்கள் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அந்தப் பகுதி மக்கள் வெற்றுக் குடங்களுடன் நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் சன்னதி எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா காவலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அந்தப் பேச்சு வார்த்தையில், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

அதன்பேரில் மக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

கண்ணாடி முன் நின்று கல்லெறியும் திமுக.. ஸ்டாலினுக்கு சுளுக்கெடுத்த தளபதி விஜய்!
மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!