
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் கல்லூரி தாளாளராக உள்ளார். இவர் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் விஜய் என்பவரை தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர் சிகிச்சைகாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் செந்தில்குமார் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாகியுள்ளார்.
பங்காரு அடிகளாருக்கு 2 மகன்கள், அதில் ஒருவர் கோவில் நிர்வாகத்தையும் செந்தில் குமார் பள்ளி கல்லூரிகளை நிர்வாகித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வரும் நிலையில் மாணவனை தாக்கி வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.