
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ஆயிகவுண்டன் பாளையத்தில் வசிப்பவர் ஆனந்த ராஜ். இவர் இங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு குடிபோதையில் விபத்து ஏற்பட்டு அவினாசி அரசு மருத்துவமணையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போதையுடன் அதிக மனஉளைச்சலுடன் இருந்துள்ள ஆனந்தராஜ் அதிகாலை வேளையில் அங்கிருந்த மின்விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆனந்தராஜ் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. வேலைக்காக வெளியூரில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஆனந்தராஜின் தற்கொலை குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.