
விழுப்புரம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு என்ன பண்ணலாம்? என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் நடைப்பெற்றது.
அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு, ஆணையர் (பொறுப்பு) சுரேந்திரன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் மருத்துவர் ராஜா, வருவாய் ஆய்வாளர் சௌந்தரராஜன், நகரமைப்பு அலுவலர் அமலின் சுகுணா முன்னிலை வகித்தனர்.
இதில், வரும் 2017-ஆம் ஆண்டிற்கான உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் செந்தில், தி.மு.க., நகரத் தலைவர் சக்கரை, புருஷோத்தமன், பா.ஜ., ராம்பிரசாத், காங்., ராஜ்குமார், அகமது, தே.மு.தி.க., சிவா, கம்யூ., கண்ணப்பன், ஏழுமலை, பா.ம.க., ராஜா, வி.சி., கட்சி இரணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.