
ஈரோட்டு மாவட்டம் சென்னிமலையை அடுத்த உப்பிலிபாளையத்தில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டுவதற்கு எதிப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பவனி அணை தடுப்பு குழுவினர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஈரோட்டில் உண்ணாவிரம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரினார்.
ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காலையில் 100க்கும் மேற்பட்ட பவானி அணை தடுப்பு குழுவினர் உப்பிலிபாலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்த கூடாது என்று போலீசார் கூறியதால் இருதப்பும் இடையே கடும் மோதல் வெடித்ததுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பவானி அணை தடுப்பு குழு தலைவர் பொன்னையன் கைது செய்யப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.