ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஊராட்சி செயலாளருக்கு மதுரை கிளை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு.
கடந்த 2ம் தேதி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தொடர் கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை ஊராட்சிமன்ற செயலாளர் தங்கபாண்டியன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்ளில் பரவி பெரும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஊராட்சிமன்ற செயலாளர் தங்கபாண்டியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நீ எப்படி டா கேள்வி கேட்ப? விஜயகாந்த் ஸ்டைலில் விவசாயியை பாய்ந்து வந்து தாக்கிய ஊராட்சி செயலாளர்
அப்போது மனுதாரர் தரப்பில், கிராமசபைக் கூட்டத்தின் போது நடந்துகொண்ட சம்பவத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும், இதனால் தம்மை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால், இதற்கு விவசாயி அம்மையப்பன் தரப்பிலும், அரசு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொது இடத்தில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது. ஆகையால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று முறையிடப்பட்டது.
ஆய்வின் போது திடீரென கீழே விழுந்த அதிகாரி; நூலிழையில் தப்பிய அமைச்சர் ஏ.வ.வேலு
ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் வாரத்தில் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.