தலைக்கு ஏரிய மதுபோதை… ஹோட்டலில் மயங்கி விழுந்த ஊராட்சி மன்ற தலைவர்… வீடியோ வைரல்!!

Published : Jul 20, 2022, 08:34 PM ISTUpdated : Jul 21, 2022, 10:53 AM IST
தலைக்கு ஏரிய மதுபோதை… ஹோட்டலில் மயங்கி விழுந்த ஊராட்சி மன்ற தலைவர்… வீடியோ வைரல்!!

சுருக்கம்

திருப்பூரில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஊராட்சி மன்ற தலைவரை உடன் வந்தவர்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   

திருப்பூரில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஊராட்சி மன்ற தலைவரை உடன் வந்தவர்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவை சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி பல்லடம் கரையான்புதூரில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சோதனை.. அசால்ட்டாக பதில் சொல்லிய தங்கமணி !

மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட,மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின்னர் கட்சி தொண்டர்களுடன் சென்ற அசோக்குமார் பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !

அங்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர் நடக்க முடியாமல் தலைதொங்கியபடி இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி சென்றுள்ளனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஊராட்சி மன்றத் தலைவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பாஜக கட்சி நிர்வாகி மதுபோதையில் சரிந்து நடக்க முடியாமல் இருந்த சிசிடிவி காட்சிகள் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!