
கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து திருச்சி சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியும், அதன் தொடர்ச்சியாக மக்களிடம் ஏற்பட்ட எழுச்சி காரணமாக அந்நாட்டின் அதிபராக இருந்த கோட்டபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடுயதோடு தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனிடையே இலங்கை மக்கள் புரட்சியின் பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: 20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !
ஆனால் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மறுத்து வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் (தேசிய புலனாய்வு முகைமை) என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.