நாளை முதல் பாம்பன் பாலம் மீண்டும் இயக்கம்...! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

By ezhil mozhiFirst Published Feb 26, 2019, 6:14 PM IST
Highlights

பாம்பன் ரயில் பாலம் சீரமைத்து பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை முதல் வழக்கம் போல ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாம்பன் ரயில் பாலம் சீரமைத்து பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை முதல் வழக்கம் போல ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 84 நாட்களுக்கு பின் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் ரயில் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - ராமேசுவரம் இடையே 2.2 கிலோ மீட்டர் தொலைவில் பாம்பன் கடல் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 04 ஆம் தேதி வரையில் ரயில் போக்குவரத்து செயல்பட்டு வந்தது.

அதன் பின், கடந்த ஆண்டு டிசம்பர் 04 ஆம் தேதி பிற்பகல் பாலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக ராமேசுவரம் வரும் அனைத்து ரயில் போக்குவரத்துக்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது.இதனையடுத்து பாம்பன் பாலத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக செய்யப்பட்டு வந்தது. பல கோடி ரூபாய் செலவில் பணிகள் முழுமையாக செய்யப்பட்டு முடிந்த பின்னர்  தற்போது இந்திய ரயில்வே தலைமை பொறியாளர் சான்றிதழ் அளித்துள்ளது.

இதனைதொடர்ந்து 84 நாட்களுக்கு பின் நாளை 27ஆம் தேதி வழக்கம் போல ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து௭ள்ளனர் 

click me!