ஆன்டோ - மெர்லினா இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுவில், பணிப்பெண்ணைத் தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து ஜாமீன் வழங்கக் கோரியுள்ளனர்.
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் இருவரும் தாங்கள் அப்படி எல்லாம் கொடுமைப்படுத்தவே இல்லை என்று மறுத்துள்ளனர். இது தொடர்பாக, இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன். இவரது மனைவி மெர்லினா. இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூரில் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது இளம்பெண் அடித்துத் துன்புறுத்தியதாக அந்தச் சிறுமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக எம்எல்ஏ கருணாநிதி இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். மகனும் மருமகளும் தனியாக வசிப்பதால் இதைப்பற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
6 லட்சத்தைத் தாண்டிய டாடா நெக்சான் உற்பத்தி! கார் பிரியர்கள் எல்லாருக்கும் பிடிச்ச எஸ்யூவி இதுதான்!
இளம்பெண் கூறிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆன்டோ மற்றும் மெர்லினாவை ஜனவரி 25ஆம் தேதி ஆந்திரா அருகே கைது செய்தனர். அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ்நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்டோ - மெர்லினா இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுவில், பணிப்பெண்ணைத் தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து ஜாமீன் வழங்கக் கோரியுள்ளனர்.
இந்தப் பெண்ணை தங்கள் குடும்ப உறுப்பினர் போலவே நடத்தியதாகவும், கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து கல்விக் கட்டணத்தையும் செலுத்தியிருப்பதாவும் மனுவில் கூறியுள்ளனர். இந்த ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து 3 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்!