மதுரை விமான நிலையத்தில் அரங்கேரிய வாகன நிறுத்துமிட கட்டணக் கொள்ளையை வாகன ஓட்டி ஒருவர் ஆதாரத்துடன் நிரூபித்த நிலையில் குற்றம் செய்யப்பட்ட நபர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காகவும், அழைத்துச் செல்வதற்காகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அவ்வாறு வந்து செல்லும் வாகனங்களில் அவர்கள் அங்கு இருக்கும் நேரத்தின் அடிப்படையில் வாகனத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டண வசூல் முறையில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
undefined
இதனிடையே வாகன ஓட்டி ஒருவர் 20 நிமிடங்கள் வாகனத்தை விமான நிலையத்தில் நிறுத்திவிட்டு வெளியே வரும்பொழுது அவரிடம் கட்டணமாக 60 ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுப்பதை அறிந்த கட்டண வசூல் மைய பணியாளர் பின்னர் 20 ரூபாய் கேட்டுள்ளார்.
கோவில்பட்டியில் காவலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் விமான நிலைய அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றம் இழைத்த நபர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.