Latest Videos

Edappadi Palaniswami: சிறையில் இருந்தபடி இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய குற்றவாளி; பழனிசாமி சீற்றம்

By Velmurugan sFirst Published Jul 2, 2024, 11:16 PM IST
Highlights

சென்னை புழல் சிறையில் இருந்தபடி கைதி ஒருவர் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலை அரங்கேற்றிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், சிறையிலிருந்து ஒரு கைதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம்.

திருச்சியில் ஓட்டுநரின் கவனக்குறைவால் தவறி விழுந்து உயிரிழப்பு? போலீஸ் விசாரணை

ஏற்கனவே திமுக அயலக அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் மாபியா நடத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு போதைப்பொருள் மாபியா அம்பலப்பட்டிருப்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக மாறியிருப்பதையே காட்டுகிறது.

சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட (CNG) அரசு பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திரு. ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம். தமிழ்நாட்டில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளை முற்றுமாக ஒழிக்க வேண்டும். இல்லையேல், போதைப்பொருள் புழக்கத்திற்கு பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

click me!