Latest Videos

திருச்சியில் ஓட்டுநரின் கவனக்குறைவால் தவறி விழுந்து உயிரிழப்பு? போலீஸ் விசாரணை

By Velmurugan sFirst Published Jul 2, 2024, 11:03 PM IST
Highlights

திருச்சியில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வானதிரையான் பாளையம்,ஸ்ரீ அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகள் பிபிக்க்ஷா (வயது 13), புதூர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளிக்குச் செல்ல தின்னக்குளம் விரகாலூர் கிராமத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் வானதிரையான் பாளையம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறினார்.

சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட (CNG) அரசு பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பேருந்தில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமியின் கால் மீது பேருந்து ஏறியதில் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த பள்ளி மாணவி பிரதிக்ஷா திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

பாமக.வுக்கு அளிக்கும் வாக்கு சாதி, மதவாதத்திற்கு அளிக்கும் வாக்கு; பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை

தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் தங்கதுரை (50), நடத்துனர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!