நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை; தமிழக அரசு அதிரடி

By Velmurugan sFirst Published Jun 1, 2023, 5:27 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நலன் கருதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிளுக்கு பதிலாக இடைத்தரகர்களே இலாபம் பார்ப்பதாகவும், விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

அதாவது நெல்மூட்டைகளை விற்க வரும் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் அதிகாரிகள் கேட்பதாகவும், இதனை தவிர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. அதே போன்று விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் நெல் கொள்முதல் நிலையங்களில் டன் கணக்கில் மூட்டைகளை விற்று விடுகின்றனர். இதனால் விவாயிகளுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் விவசாயிகளை சென்றடையாத நிலை உள்ளது என குற்றம் சாட்டப்பது.

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல் 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் பயோமெட்ரிக் முறை மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தவறி விழுந்த பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து; மகன் கண் முன்னே பலியான தாய்

click me!