இந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Published : Jun 01, 2023, 03:54 PM IST
இந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

சுருக்கம்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 3-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க : 30 ஆண்டுகால பயணம்; பேருந்தை கட்டியணைத்தபடி கண்ணீருடன் விடை பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு இலங்கை பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காவேரி கூக்குரல் இயக்கம் இந்த வருடம் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Chennai Power Cut : சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு? - முழு விவரம்