அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் பண்ணை வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு

By Velmurugan s  |  First Published Jun 1, 2023, 4:49 PM IST

கரூர் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை ஏழாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான "சங்கர் ஃபார்ம்ஸ்" பண்ணை வீட்டில் வருமான வரி சோதனை தொடங்கியது.

Latest Videos

undefined

இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாந்தோப்புடன் கூடிய 4000 சதுரடி அளவு பங்களா வீடும், நீச்சல் குளமும் இருப்பதாகவும், முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தளிப்பதற்காக இந்த பண்ணை வீடு பயன்படுவதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரார்த்தனை

ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான அலுவலக பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. 

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல் 

click me!