வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கு... கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது!!

By Narendran S  |  First Published May 28, 2023, 11:34 PM IST

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தியதோடு அதிகாரிகளின் வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

இதையும் படிங்க: யார் இந்த அசோக்குமார்.?செந்தில் பாலாஜி சகோதரரின் முழு பின்னனி என்ன.? வருமான வரி சோதனையில் ஆவணங்கள் சிக்கியதா.?

Latest Videos

இதனால் முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் ராயனூரிலும் அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வரும் 1-ம் தேதி வரை கனமழை பெய்யும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா? வானிலை மையம் தகவல்

இதற்கிடையே, அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கு தொடர்பாக கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

click me!