மாறி மாறி புகார்.! ஐ.டி. அதிகாரிகள், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் போலீஸ்..!

By vinoth kumarFirst Published May 27, 2023, 9:12 AM IST
Highlights

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது  ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுகவினர் 50 பேரும் மீதும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நேற்று வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். 

அத்துடன் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது திமுக தொண்டர் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையின் போது  தாக்குதல் நடத்தியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் திமுகவினர் 50 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, சோதனையின் போது ஒன்றாக கூடியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திமுக பிரமுகர் முருகன் அளித்த புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது ம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

click me!